LittlepoemS.com
Headlines News :

Latest Post

தமிழா

Written By KAJANTHAN JS on Thursday 12 January 2012 | 07:17




தமிழா நீ 
வாழ்ந்து கொண்டே போராடு
புதுயுகம் உனக்கும் சேர்த்துதான்
நீ மடிந்து பெறும் உலகம்...
தமிழா நீயும் வாழ வேண்டும்!
தமிழும் வாழ வேண்டும்!

அட்ஷய பாத்திரம்



தோல்வியின் முதற்படியோ

வெற்றி என்பார்க‌ள்
க‌வ‌லையின் முத‌ற்புள்ளியோ
ஆன‌ந்த‌த்தின் முற்றுபுள்ளி என்பார்க‌ள்....
ஆனால் க‌வ‌லையும் தோல்வியும்
என் வாழ்வில் ம‌ட்டும் 
அட்ஷய பாத்திரமாயிருக்கின்றதே...  

உன் நினைவு.




சொந்தத்தில் வந்தது பாசம் 
கற்பனையில் வந்தது கவிதை 
சோகத்தில் வந்தது கண்ணீர் 
துக்கத்தில் வந்தது கனவு 
தனிமையில் வந்தது உன் நினைவு

காத்திருப்பு..!




உனக்காய் காத்திருக்கிறேன்
விழியோரம் நீர் துளிகளுடன்
உன் வருகைக்காய் ஏங்கும் 
என் இதயம் துடிப்பது நின்றாலும்
என்றாவது ஒரு நாள் 
எனக்காய் நீ சிந்தும்
ஒரு துளி கண்ணீரில்
சாந்தியடையும் என் ஆத்மா!

வயது...



என் வயதை எல்லோரும்
பன்னிரண்டென்றனர்
ஆதவன் தொடக்கம்
அப்பாவரை அதையே
சொன்னனர்...
அம்மா மட்டும்
பதின்மூன்றென்றாள்
உண்மை அறிய
கடவுளைக்கேட்டேன்
உண்மைதான் சேயே
அம்மா சொல்வது
மற்றவற்கு உன்வயது
நீ பூமிக்கு வந்த நாள்
தாய்க்கு உன்வயது நீ...
கற்பத்தில் வந்த நாள்...

காதலியே.....




நீ தூங்குவதற்கு சரியான இடம் 
என் இதயம் எனின் 
நிறுத்திவைப்பேன் என் இதய துடிப்பை
நீ கண் விழிக்கும் வரை....

நிழலாய் பின்தொடர்கின்றேன்




கனவு வந்து போன பின்பும் 
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல் 
நீ வந்து போனதற்கான தடயங்களின் 
நிழல்களை என்மனதுக்குள் தந்துவிட்டு 

நிஜங்களை நீ பறித்துசெல்ல - நான் 
நிழலாய் பின்தொடர்கின்றேன் - உன்னை 
உந்தன் நினைவுகளைச்சுமந்த படியே...

மரணத்தின் முதல் எல்லை



அன்பே !
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
கனவின் நீளம்
கண் விழித்ததும் முடிவடையும்
உன் நினைவின் நீளம்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்
ஒவ்வொரு வாழ்வின் முடிவெல்லை
மரணமாக இருந்தபோதிலும்
ஒவ்வொரு மரணத்தின் முதல் எல்லை
வாழ்வாக இருந்ததில்லை....

உறவுகள் தந்த வலிகள்




பற்றில்லாத நெஞ்சங்கள் 
தருகின்ற துன்பங்கள் 
எழும்பாத‌ கண்ணீராய் விழுகின்றதே 
பொய் பித்தர்களின் 
உன் உறவுகளின் அன்பு 
பாசங்கள் என்றுமில்லை
நீ கத்தியழ இனி சக்தியில்லை 
அட ஏனோ இந்த நிலை 
சிறகு உடைத்தது ஒரு பறவை 
இனி இறங்கிடும் இவள் சிலுவை
உலகே உலகே திறந்திடு புது கதவை!!!!!!

அப்பா



தொட்டினிலே எனை
போட்ட நாள்முதலாய்
தோளினிலே எனை
சுமந்து வளர்ப்பார் அப்பா..
எனக்காக உடல்
வருத்தித் தேயும் அப்பா
எம் மழலை மொழி
கேட்டு மகிழும் அப்பா..
கல்வியிலே நாம்
உயரச் செய்யும் அப்பா
கடமையிலே கண்ணாக
வளர்ப்பார் அப்பா..
உன் மூச்சில் எமை
கலந்து வாழும் அப்பா
உழைப்பாயே எமக்காக
ஓடாய்த் தேய்ந்து..
ஒரு போதும் உன்னை
நான் மறக்க மாட்டேன்
உன் காலில் செருப்பாகி
நானும் தேய்வேன்..
உன் பெருமை எழுதிட
தான் முடிந்திடுமா
உலகத்தின் வடிவமே
நீ தான் அப்பா..
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. LittlepoemS.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger